ஏன் கமல் ஹாசன்

ஒரு புதிய அரசியல் விதை

எதற்காக இப்புத்தகம்?

பழம் அருமை பெருமைகளை நினைவுகூர்ந்து அதை மட்டுமே சிலாகித்து சிலாகித்து பேசிக்கொண்டு மட்டுமே இருக்கின்ற வகையான அரசியல் தலைவராக இல்லாமல், ஒரு நடைமுறைவாதியாக நமது பண்பாட்டுப் பெருமைகள், நடைமுறை பிரச்சனைகளை தீர்க்காது என்பதைப் புரிந்த,

தமிழக கள அரசியல் தெரிந்த, தமிழகத்தின் ஆதார வரலாறு தெரிந்த, ஆழமான பார்வையுடைய, புதிய அரசியல் தெளிவுரையை உள்ளடக்கி, அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்கக்கூடிய சிந்தனையும் உடைய, “மக்கள் நலன்” மட்டுமே “அரசியல்” என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு. கமல் ஹாசன் அவர்களின் 2018 முதல் இன்று வரையிலான அரசியல் பயணம் குறித்த பதிவாக இப்புத்தகம் அமையும்.

இந்தப் புத்தகம் எழுதுவதற்கான உந்து சக்தி என்பது திரு.கமல் ஹாசன் அவர்களின் "சொல்லும் செயலும்" ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நேர்மை மட்டுமே. அந்த நேர்மையில் இருந்த சத்தியத்தினால் மட்டுமே இப்புத்தகம் சாத்தியமாயிற்று.

சமர்ப்பணம்.

என் இரண்டு குழந்தைகள் அதா, ஓஷின் மற்றும் தமிழகத்தின் அனைத்து இளைய தலைமுறைக்கும் இப்புத்தகம் சமர்ப்பணம்.

நூல் ஆசிரியர் குறித்து:

சத்ய மூர்த்தி மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் தெற்காசிய நாடுகளில் மிக முக்கியமாக சிங்கப்பூரில் தனது வாழ்க்கைப் பயணத்தின் பாதியை வாழ்ந்தவர். சுயதொழில் வணிகர். சமூக வலைத் தளங்களில் இவரைப் பின் தொடர @cupidbuddha



Buy Now